சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிஸ்னஸ் ஃபைனான்ஸ் பி.எல்.சி.

முக்கிய அறிவிப்பு: வாடிக்கையாளர் தகவல்களைக் காலத்திற்கேற்ப புதுப்பித்தல்

1. இந்தத் தகவல்களை ஏன் கோருகிறோம்?2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் சட்டம் (திருத்தப்பட்டவாறு) மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு (FIU) வெளியிட்ட 2016 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நிதி நிறுவனங்கள் (வாடிக்கையாளர் தகவல் தகுதியாய்வு) விதிகள் (திருத்தப்பட்டவாறு) ஆகியவற்றின் கீழ், நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர் தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், அவற்றைப் புதுப்பித்துப் பராமரிக்கவும், மீளாய்வு செய்யவும் வேண்டும். இது பணத்தைத் தூய்தாக்குதல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் ஆகியவற்றைத் தடுக்க உதவுவதுடன் (AML/CFT), நிதிக் குற்றங்களிலிருந்து வாடிக்கையாளர்களையும் நிதி முறைமையையும் பாதுகாக்கிறது.இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் வழக்கமான ஒழுங்குமுறைத் தேவையாகும். இந்த அறிவிப்பு உங்கள் கணக்கில் ஏதேனும் முறைகேடு இருப்பதைக் குறிக்கவில்லை. 2. புதுப்பிக்க வேண்டிய தகவல்கள்உங்கள் தகவல்களை ஏற்கெனவே புதுப்பித்திருந்தால் அல்லது சரிபார்க்கப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தால், இந்த அறிவிப்பைப் பொருட்படுத்தத் தேவையில்லை.தகவல் வகைதேவையான தகவல்கள்நிரந்தர முகவரிஉங்கள் தற்போதைய நிரந்தர முகவரியும் அதை உறுதிப்படுத்தும் ஆவணமும்தொடர்பாடல் முகவரிஅது நிரந்தர முகவரியிலிருந்து வேறுபட்டிருந்தால், உங்கள் அஞ்சல் முகவரியும் அதை உறுதிப்படுத்தும் ஆவணமும்தொடர்புத் தகவல்கள்உங்கள் தொலைபேசி இலக்கங்களில் அல்லது மின்னஞ்சல் முகவரியில் ஏற்பட்ட மாற்றங்கள்வேலைவாய்ப்பு அல்லது வணிக விவரங்கள்உங்கள் தொழில், தொழில் வழங்குநர் அல்லது வணிகத்தின் தன்மைவருமான மூலங்கள்உங்கள் பிரதான வருமான அல்லது நிதி மூலங்கள்எதிர்பார்க்கப்படும் மாதாந்தப் புரள்வு அல்லது வணிக அளவுஒரு மாதத்தில் உங்கள் கணக்கில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் பரிவர்த்தனைகள்எதிர்பார்க்கப்படும் பரிவர்த்தனை முறைகள்உதாரணமாக, பணம், காசோலை அல்லது மின்னணுப் பணப்பரிமாற்றம் 3. கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்உங்கள் புகைப்படத்தைக் கொண்ட உத்தியோகபூர்வ அடையாள ஆவணத்தின் அசல் பிரதி (தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரம்)உங்கள் நிரந்தர முகவரியையும் தொடர்பாடல் முகவரியையும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் (உதாரணமாக, கிளை ஏற்றுக்கொள்ளும் பயன்பாட்டுச் சேவைக் கட்டணப் பட்டியல்)பொருந்தும் சந்தர்ப்பங்களில், வேலைவாய்ப்பு அல்லது வணிகத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் 4. தகவல்களைப் புதுப்பிக்கும் முறை1கிளையின் சேவை நேரத்தில் உங்களுக்கு அருகிலுள்ள CDB கிளைக்குச் செல்லுங்கள்.2உங்கள் அடையாள ஆவணத்தையும் தொடர்புடைய ஆதார ஆவணங்களையும் சமர்ப்பியுங்கள்.3கிளைப் பணியாளர்களின் உதவியுடன் வாடிக்கையாளர் தகவல் புதுப்பிப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.ஒரு கிளையைக் கண்டறிய அல்லது வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்ள இந்த இணையத்தளத்தைப் பார்வையிடுங்கள்: https://cdb.lk/contact-us 5. தகவல் பாதுகாப்பும் தரவுப் பாதுகாப்பும்உங்கள் தகவல்களை CDB கிளையிலோ அல்லது CDB இன் உத்தியோகபூர்வ சேவை வழிகளினூடாகவோ மட்டுமே புதுப்பியுங்கள்.நீங்கள் வழங்கும் தகவல்கள் ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் சேவைகளை வழங்குவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படும். அவை பொருந்தும் தரவுப் பாதுகாப்புத் தேவைகளுக்கு அமைவாகக் கையாளப்படும். 6. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்எனது கணக்கு ஆபத்தில் உள்ளதா அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதா?இல்லை. இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் வழக்கமான நடைமுறையாகும்.என்னால் உடனடியாகக் கிளைக்குச் செல்ல முடியாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?உங்களுக்கு வசதியான நேரத்தை ஏற்பாடு செய்துகொள்ள உங்கள் கிளையைத் தொடர்புகொள்ளுங்கள். தகவல்களை விரைவாகப் புதுப்பிப்பது உங்கள் சேவைகளில் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்க்க உதவும்.என் சார்பாக வேறொருவர் எனது தகவல்களைப் புதுப்பிக்க முடியுமா?ஒரு பிரதிநிதியை அனுப்புவதற்கு முன், அதற்கான அதிகாரமளிப்புத் தேவைகளை உறுதிப்படுத்த உங்கள் கிளையைத் தொடர்புகொள்ளுங்கள். 7. இலங்கை மத்திய வங்கியும் நிதியியல் உளவறிதல் பிரிவும் வெளியிட்ட பொது அறிவிப்புஒழுங்குமுறை அமைப்புகள் வெளியிட்டுள்ள பின்வரும் பொது விழிப்புணர்வு அறிவிப்பு, வாடிக்கையாளர்கள் வழங்க வேண்டுமென எதிர்பார்க்கப்படும் தகவல்களை விளக்குகிறது.CBSL மற்றும் FIU பொது அறிவிப்பு: நீங்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளரா?