ACCA நிலைபேறாண் லை அறிக்லகயிடை் விருதுகளிை் CDB வெற்றியுடன் சிறந்து விளங் குகிறது

மக்கள், சூழல் மற்றும் இலாபத்திற்கான பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வில் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், கடந்த வாரம் நடைபெற்ற பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் சங்கத்தினால் ( ACCA) வழங்கப்பட்ட இலங்கை நிலைபேறாண்மை அறிக்கையிடல் விருதுகளின் 20ஆவது பதிப்பில், CDB ஏனைய நிதிப் பிரிவில் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. உலகெங்கிலும் பரவியுள்ள விருதுத் திட்டத்தின் கீழ் ACCA இலங்கையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது, சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்கள் உட்பட நிலைபேறாண்மை தகவல்களை முழுமையாக வெளிப்படுத்துகின்றமை, நிறுவன வெளிப்படைத்தன்மை சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் பங்குதாரர்களுக்கு பதிலளிக்கும் பொறுப்பை அதிகரித்தல் போன்றவற்றிற்கு வெகுமதி அளித்து அங்கீகரிக்கிறது.

Amrita School of Sustainable Futuresஇன் பேராசிரியர் சந்தோஷ் ஜெயராம் தலைமையிலான நடுவர் குழு, அதன் நடுவர் அறிக்கையில், CDBயின் அறிக்கை அதன் உத்தியை வெளிப்படுத்துவதில் தனித்து நின்றதாகவும், பத்து வருட காலத்திற்கு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நிலைபேறாண்மையை மையமாகக் கொண்டிருந்ததாகவும் கூறியது. "இது (CDB அறிக்கை) மிகவும் பாரம்பரியமான துறையில் ஒருங்கிணைந்த சிந்தனையை நிரூபித்து அதனை சான்று பகர்கின்றது. சிறுவர் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் ஆட்டிசம் (Autism) ஆகியவற்றிற்கான அதன் நீண்டகால அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது."

மூலோபாய உத்தி, நிர்வாகம், இடர் முகாமைத்துவம், அளவீடுகள் மற்றும் இலக்குகள் ஆகிய மதிப்பீட்டு அளவுகோல்கள் உடன் அறிக்கையின் ஒட்டுமொத்த விளக்கத்தில் நியாயமான விளக்கம், பொருள் தன்மை, அறிக்கையிடல் நிறுவனம் மற்றும் இணைப்புத் தகவல்களும் மதிப்பிடப்படுகின்றன.

நிறுவனங்கள், மக்கள், சூழல், இலாபம் என்ற அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளும்போது, அது குறுகிய கால ஆதாயங்களுக்கு அப்பால் நீண்ட கால மீள்தன்மைக்கு நகர்கிறது என CDBஇன் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி தமித் தென்னகோன் கூறுகையில், “நிலைபேறாண்மை அறிக்கையிடலின் தரத்தை உயர்த்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இந்த விருது மீண்டும் வலியுறுத்துகிறது. எங்கள் தரநிலைகளை தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலம் CDB, எதிர்காலத்தை மையமாகக் கொண்டது என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் பங்குதாரர்களுடன் ஈடுபட்டு எங்கள் இலக்குகளுக்கு அப்பால் செல்வதற்கு உறுதிபூண்டுள்ளோம் என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.”என்றார். CDB நிறுவனம், வெளிப்படையான அறிக்கையிடலைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நிலையான, உள்வாங்கிய மற்றும் நீதியான எதிர்காலத்தை உருவாக்கி சிறந்த நாளையை வடிவமைக்க பொறுப்புடன் உறுதிபூண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

படம் 01 - CDBஇன் நிலைபேறாண்மை முகாமையாளர் வஜிஷா எதிரிசிங்கவிற்கு பிரதம விருந்தினரான ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் விருதை வழங்கும் அதே வேளை ACCA உறுப்பினர் வலையமைப்புக் குழுவின் தலைவர் சாமிந்த குமாரசிறியால் சிரேஷ்ட நிதி உதவிப் பொது முகாமையாளர் சமத் சிறிவர்தனவிற்கு சான்றிதழ் வழங்கப்படுகின்றது. ACCA தெற்காசிய பகுதியின் தலைவர் நிலுஷா ரணசிங்க மற்றும் CDB சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேறாண்மையின் உதவிப் பொது முகாமையாளர் சுனெத் சேனாதீர ஆகியோர் அவர்களுடன் நிற்கின்றனர்.


படம் 02 - ACCA இலங்கை நிலைத்தன்மை அறிக்கையிடல் விருதுகளில் வெற்றி பெற்ற CDB குழு